பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் பேபி சாரா…

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாரா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாரா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 விக்ரம் மகளாக ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் பேபி சாரா. தொடர்ந்து, ‘சைவம்’, ‘விழித்திரு’,‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

விக்ரம் மகளாக ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் பேபி சாரா. தொடர்ந்து, ‘சைவம்’, ‘விழித்திரு’ ,‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சாரா, தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது சாரா மணிரத்னத்தின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தாய்லாந்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.