பொது சுகாதார பரிசோதகர் தொடர்பான சுற்றறிக்கை தவறு.

தேர்தல் காலத்தின் போது கொரோனாவை கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

எந்தவொரு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் வாக்குச் சாவடிகளிலும் நேரடியாக நுழைய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சுற்றறிக்கை மூலம் அகற்றப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என சட்டமா அதிபரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலை நடத்துவதில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரங்களும் சுகாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டுள்ளார்.

எனவே சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என்று சட்டமா அதிபர் சுகாதார செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.