பொடி லெசியின் உதவியாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பொடி லெசி என்பவரின் உதவியாளர் ஒருவர் மிடியாகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 45 கிராம் கேரள கஞ்சா மற்றும் இரு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக மிடியாகொட பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.