பொடி லஸ்ஸியின் தாயார் கைது

போதைபொருள் வியாபார நடவடிக்கை மூலம் பெறப்பட்ட நிதியை கையாண்டமை தொடர்பாக திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ´பொடி லஸ்ஸி´ என அழைக்கப்படும் அருமஹந்தி ஜனித் மதுஷங்கவின் தாயார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடுவ தெல்வத்த பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய குறித்த சந்தேகநபர் பன்னிப்பிட்டிய மாயா எவனியு பகுதியில் மறைந்திருந்த வேளையில் பேலியகொடையிலுள்ள மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யும் போது அவரிடம் இருந்த வங்கிக்கணக்கு புத்தகம் ஒன்றும் ஐந்து கையடக்க தொலைபேசிகள் மற்றும் 51 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25) ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.