பேருந்து கட்டணங்கள் கொரோனா தொற்று அதிகமாக உள்ள இடங்களில் அதிகரிப்பு

தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அல்லது கொரோனா தொற்று தொடர்பாக அதி ஆபத்து வலையங்களில் பேருந்து பயணசீட்டுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்துகள் முடிவு செய்துள்ளன.

இ.போ.ச.க்கு சொந்தமான பேருந்துகள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கொரோனா தொற்று அதிகமாக உள்ள இடங்களில் அதிகரித்த பேருந்து கட்டணங்களுடன் இயங்கும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் உள்ள பேருந்துகள் கிடைக்கக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி மட்டுமே பயணிகளுக்கு இடமளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, இதுபோன்ற பகுதிகளில் இயங்கும் பேருந்துகளுக்கான கட்டணங்களை அதிகரிப்போம் என்றும் மற்றய அனைத்து பகுதிகளிலும், பேருந்து கட்டணம் மாறாமல் இருக்கும் என்றும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்