பேரழிவுக்குப் பிந்தைய உலகம்… ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம்!

பாலிவுட்டில் இருப்பவர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள்...ஷ்ரத்தா ஸ்ரீநாத்  கமன்ட் | shraddha srinath comments on bollywood industry | nakkheeran

நடிகை ஷரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் புதிய படத்துக்கு கலியுகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் அஜீத், ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆண்டு வெளியானதை அடுத்து ஷரத்தா ஸ்ரீநாத் கவனிக்கப்பட்ட ஒரு நடிகையாக மாறினார். அதன் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கும் கதைகள் அவரைத் தேடி செல்ல ஆரம்பித்தன.

இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் புதிய படத்துக்கு கலியுகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பேரழிவுக்குப் பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தை விளம்பர படங்களை இயக்கிய பிரமோத் சுந்தர் இயக்க உள்ளார். ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கே.எஸ்.ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.