பெற்றோர்களையும், தாத்தா பாட்டி(Grand Parents) கனடாவுக்கு வரவழைக்க October 13 முதல் மீண்டும் லொட்டோ(lotto)விண்ணப்ப முறையில் விண்ணப்பிக்க முடியும்

கனேடிய அரசாங்கம்  அக்டோபர் 13 ம் திகதி முதல் லொட்டோ முறையில் கனடாவில் உள்ள குடிவரவாளர்கள் தங்கள் பெற்றோர் , தாத்தா பாட்டி உறவுகளை(Grand Parents) கனடாவுக்கு வரவழைக்கமுடியும் என்று  அறிவித்திருக்கின்றது

குடிவரவு அமைச்சர் Marco Mendicino புதிய பெற்றோர், மற்றும் தாத்தா பாட்டி லொட்டோ  திட்டத்தின் விவரங்களை இன்று அறிவித்தார். இந்த திட்டம்  Covid-19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது

 இதன் படி வரும் அக்டோபர் மாதம் 13 ம் திகதி முதல் 3 வாரங்களுக்குள் மக்கள் இணையத்தின் மூலம் தங்கள் உறவினர்களை கனடாவுக்கு வரவழைப்பதுக்கான விருப்பத்தினை தெரிவிக்க முடியும்

மூன்று வார காலம் முடிந்ததும்,  கனேடிய குடிவரவு, அகதிகள்  குடியுரிமை திணைக்களம் (IRCC)

தகுதியானவர்களை எந்தவித முறைகள் இன்றி (randomly) தெரிவு செய்து, அவர்களிடம் இருந்து தங்கள் உறவினர்களை வரவழைப்பதுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் படி கோரும்

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விண்ணப்பங்களை 60 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

 பொதுவாக 20,000 வெற்றிடங்கள் இருக்கும் ஆனால் கோவிட்-19 காரணமாக இந்த திட்டம் இடையில் நிறுத்தப்பட்டதால் இந்த வருடம் 10,000 வெற்றிடங்களும்,2021இல் 30,000 வெற்றிடங்களும் இருக்கும்