பெண் ஒருவர் சடலமாக மீட்பு

நேற்று (24) மாலை புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி (வயது 71) எனும் வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த வயோதிப பெண் கடந்த சனிக்கிழமை (22) முதல் காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் காணாமல் போன குறித்த வயோதிப பெண் புழுதிவயல் களப்புக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (24) சடமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த வயோதிப பெண்ணின் சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பவற்றுக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகிறது.