பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வதுதான் – சக்திமான் நடிகரின் சர்ச்சைப் பேச்சு!

Mukesh Khanna asks children to love their motherland - Indian Express

சக்திமான் தொடரின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகர் முகேஷ் கண்ணா.

90 களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துப் பார்க்கும் ஒரு தொடராக அமைந்தது சக்தி மான். சினிமா நடிகர்களுக்கு இணையானப் புகழைப் பெற்றார் அந்த தொடரில் நடித்த முகேஷ் கண்ணா. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் சர்ச்சையானக் கருத்துகளைப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதில் ‘பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வதுதான். அவர்கள் வேலைக்கு செல்வதால்தான் மி டூ போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. இன்றைய பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். பெண்கள் வெளியே செல்வதால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்கள் செய்யும் வேலையை நாங்களும் செய்வோம் என்கிறார்கள். ஆனால் ஆண்கள் ஆண்கள்தான். பெண்கள் பெண்கள்தான்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் முகேஷ் கண்ணாவின் இந்த கருத்துக்கு இணையத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.