பூக்களின் விலை ஆயுதப்பூஜை, விஜய தசமி காரணமாக உயர்வு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கிப்பூ பயிரிடப்பட்டுள்ளன.  இங்கு விளைவிக்கப்படும் பூக்களை, சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்கத்திற்கு கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்து வருவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால், சம்பங்கி பூ விலை பத்து மடங்கு உயர்ந்து, ஒரு கிலோ சம்பங்கி பூ விலை 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமந்துறை, கெங்கவல்லி, சிறுவாச்சூர், பகுதியில் சாமந்தி பூக்கள் நல்ல விளைச்சல் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யும் சாமந்தி பூக்களை, வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி லாபம் பார்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.