புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என்பதை அந்த நாட்டு அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என்பதை அந்த நாட்டு அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார் என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெப்ரவரியில் இந்திய பாதுகாப்புப் பொலிஸ் படை வீரர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர்.இதற்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ முகம்மது என்ற பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த நிலையில், தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் தொழில்நுட்பத்துறை அமைச்சர், புல்வாமா தாக்குதல் இம்ரான்கான் தலைமையிலான அரசின் மிகப்பெரிய சாதனை எனக் கூறியுள்ளார்.இதன்மூலம் புல்வாமா தாக்குதலை பாகிஸ்தானே திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.