புலமை பரிசிலில் வவுனியாவில் 3578மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்

நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற ஜந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 3578 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களிற்காக 48 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 


அந்தவகையில் வவுனியா தெற்கு வலயத்தில் 3002 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களிற்காக 34 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு வலயத்தில் 576 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களிற்காக14 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  
இம்முறை கோவிட்-19 தாக்கத்தினை கருத்தில் கொண்டு பரீட்சை மண்டபங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பேணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
2020 புலமை பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் அண்ணளவாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள்  பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் அவர்களிற்காக நாடளாவிய ரீதியில் 2,936பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.