புரட்டாசி மாதம்: தென் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. மலைக்கோயிலான இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலாக இருப்பதால் நோய் பரவலை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் ஆணையர் வழிகாட்டுதலின்படி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக சாமி தரிசனத்திற்காக காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் கட்டணமில்லா சேவை மற்றும் கட்டண சேவை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக www.tnhrce.gov.in என்ற இணையதள பக்கத்தை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.