
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளம்பெண் 15 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், புனிதர்கள் வாழ்ந்த பூமி வன்கொடுமை பூமியாக மாறி வருவதாக வேதனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரபல நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.