புத்தூர் வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

புத்தூர் வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.
புத்தூர் – நிலாவரை வீதி வழியாக இன்று(வியாழக்கிழமை) காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார்.
அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்து விட்டார்  என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக்க சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.