புதுமணத் தம்பதியினர் தனிமைப்படுத்தலில்!

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், பொலிஸார் இணைந்து ஆலய முன்றலில் வைத்து சுகாதார நடைமுறைகளின் சமய ஆசாரப்படி திருமண நிகழ்வு நடத்தப்பட்டது. அதன்பின்னர் புதுமணத் தம்பதியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

#srilanka_news