புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் முழு ஊரடங்கு

புதுச்சேரி மாநிலத்தில் ஒகஸ்ட் 31 ஆம் திகதிவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் முழு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொளி காட்சியில்  புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த கடைகள்  நாளை முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதி என்று மாற்றப்படுவதாக நாராயணசாமி குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுலுக்கு வரும் என்றும் அன்று எந்தவித தளர்வுகளும் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.