புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளிக்காது: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த கல்விக்கொள்ளகைக்கு ஆதரவாகும் எதிராகவும் குறல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த கல்விக்கொள்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களும் தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மேற்குவங்க அரசு ஒப்புதல் அளிக்காது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர், மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கை தரவிரிசை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஆனால் தான் தரவரிசை முறைக்கு ஆதரவாக இருக்கிறேன். ஏனெனில் இது ஒரு மாணவரின் திறமை மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கிறது. அவ்வாறு தரவரிசை முறை இல்லையென்றால் அது ஒரு நபரின் திறமை, கடின உழைப்பு மற்றும் நம்பகத்தன்மையை அங்கீகரிக்காது என தெரிவித்தார். புதிய கொள்கையின் விதிகளை தனது அரசாங்கம் ஏற்கவில்லை. நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம் புதிய கல்விக்கொள்கையில் உடன்பாடு இல்லை என அவர் தெரிவித்தார்.