புதிய உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்கு நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடுசெய்யும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள் தலைவரும், வாழ் நாள் பேராசிரியருமான ஞானமுத்து பிலேந்திரன், 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நேற்றுமுன்தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால், யாழ். பல்கலைக்கழத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.