புதிய அமைச்சரவை இன்று கூடுகின்றது.

புதிய அமைச்சரவை இன்று (19) முதல் தடவையாக கூடவுள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், அமைச்சரவை கூடவுள்ளதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, 09ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை (20) இடம்பெறவுள்ளது.
நாளை முற்பகல் 9.30 மணிக்கு முதலாவது அமர்வு ஆரம்பமாகும் என, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை Archives · SAMACHCHARAM