புதிதாக மலையாள படத்தில் ஒப்பந்தமான நயன்தாரா! அதுவும் புதுமுக இயக்குனர்!!

அந்தப் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு- நயன்தாரா ||  Nayanthara names worst movie role in her fifteen years career

நயன்தாரா புதிதாக ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும், அவர் முதன் முதலில் அறிமுகமானது மலையாள சினிமாவாக இருந்தாலும் அவர் ஒரு கட்டத்துக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதற்கு அவரின் சம்பளமும் ஒரு காரணம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் புதிதாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் அப்பு என். பட்டாதிரி முதல் முறையாக இயக்கும் இந்த படத்தில் குஞ்சக்கோ போபனுடன் நடிக்க உள்ளார்.