பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் தேர்தலில் பாஜக வெற்றி பெரும்; எல் முருகன்!

சென்னையில் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தீபாவளி பண்டிகை வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய அவர், தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்தோம் என்றும் இந்த சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என தெரிவித்தார். மேலும் பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.