பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகள் எதுவும் விண்ணுக்கு ஏவப்படவில்லை. இந்நிலையில் 51வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 26 மணி நேர கவுண்டவன் நேற்று (06-11-2020) தொடங்கியது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. இது தவிர வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. 

இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டுள்ளது.