பிலிபைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஒருவர் கைது

மாலபே, வெலிவிட்ட பகுதியில் வைத்து பிலிபைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை இம்மாதம் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.