பிறந்த நாள் பரிசாக.. 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சோனு சூட்!

நடிகர் சோனு சூட் இந்தியா முழுக்க மொத்தமாக 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி வருகிறார். மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இவர் நாடு முழுக்க மக்களுக்கு உதவி வருகிறார்.

லாக்டவுன் காரணமாக வெவ்வேறு இடங்களில் முடங்கிய பிற மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இவர் உதவினார். இதற்காக இவர் பேருந்து, லாரி என்று பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

இதற்காக அவர் பெரிய அணியை உருவாக்கி இருந்தார். ஹெல்ப்லைன் நம்பர் கொடுத்து மக்களுக்கு அடுத்தடுத்து இவர் உதவி வந்தார். இதற்காக பெரிய ஹெல்ப்லைன் அணியை இவர் உருவாக்கி இருந்தார். உதவி கேட்ட மக்களுக்கு எல்லாம் காரணம் கேட்காமல் உடனுக்குடன் உதவினார் சோனு சூட். மகாராஷ்டிராவில் மட்டுமின்றி பீகார், ராஜஸ்தான் என்று வடமாநிலங்கள் முழுக்க இவர் உதவினார்.

அதேபோல் தன் மகள்களை ஏரில் வைத்து உழவு பணியை செய்த ஆந்திர மாநில விவசாயிக்கு சோனு சூட் டிராக்டர் வாங்கி கொடுத்தார். அதேபோல் ஏழை சிறுமிகளுக்கு இவர் ஆன்லைன் படிப்பிற்காக லேப்டாப் வாங்கி கொடுத்தார். அதேபோல் தெலங்கானாவைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கு சோனு சூட் வேலை வாய்ப்பு வழங்கினார். காய்கறி விற்ற பெண்ணுக்கு இவர் வேலைவாய்ப்பை வாங்கி கொடுத்தார்.

வேலைவாய்ப்பு

இந்த நிலையில் இந்தியா முழுக்க 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க சோனு சூட் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் டீம் ஒன்றை உருவாக்கி வருகிறார். வேலை தேடும் இளைஞர்களை இவர் தேடி கண்டுபிடிப்பார். அவர்களின் தகுதியை பொறுத்து இவர் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பார். இதற்கான பணிகள் இப்போதே தொடங்கப்படும் என்று சோனு சூட் அறிவித்துள்ளார்.

பிறந்தநாள் பரிசு

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு வாங்கும் பணிகளை இவர் மேற்கொள்ள இருக்கிறார். சோனு சூட் செய்யும் இந்த நற்காரியத்தை பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர். சோனு சூட் செய்யும் பணிகளுக்கு மக்களும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். சில நாட்கள் முன்தான் சோனு சூட் தனது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்த நாள் பரிசாக இந்த வேலைவாய்ப்பை அவர் இளைஞர்களுக்கு வழங்க உள்ளார்.