பிறந்தநாளின்போது, பிக்பாஸில் கண்கலங்கிய கமல்ஹாசன்..போட்டியாளர்கள் நெகிழ்ச்சி.

பிரபல பாடகர் எஸ்பிபி சமீபத்தில் காலமானார். இந்திய மக்களே அவருக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிக்பாஸ் -4 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல் நேற்று எஸ்பிபிஐ நினைத்துக் கண்கலங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது.

பிரபல சேனலில் 4 அது முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்று கமலுக்கு பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்தினர், இதில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நாகார்ஜூனா மற்றும் தெலுங்குப் போட்டியாளர்களும் கமலை வாழ்த்தினர்.

Tollywood mourns the death of beloved singer SPB- Cinema express

அப்போது நிகழ்ச்சிக்கு முன் கமலின் படங்களில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன. இதுகுறித்துப் பேசிய கமல் இப்பாடல்களைக் கேட்கும் போது, இரு ஞாபகங்கள் வருகிறது…ஒன்று இளையராஜா…மற்றொருவர் பாலசுப்ரமணியம் கடந்த பல ஆண்டுகளாக அவர் என்னை வாழ்த்தினார்…..நேரில் வரமுடியாதபோது, வாய்ஸ் மெசேஜ் செய்வார். அந்த வாழ்த்தை நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று கூறிக் கண்கலங்கினார். இதைக் கேட்டு போட்டியாளர்களும் நெகிழ்ந்தனர்.