பிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

பிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சார்லோட்டவுனை மையமாக கொண்டு தாக்கிய இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததால், வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் அச்சமடைந்து கட்டங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.