பிரித்தானியாவில் Pilot விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்கள் கலந்து கொள்வதற்கு தடை

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ள pilot எனும் பெயரால் குறிப்பிடப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை விளையாட்டு நிகழ்வுகளை பார்வையிட வரும் ரசிகர்களுக்கான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் பார்வையாளர்களுக்கு விளையாட்டு அரங்குகளில் உள் நுழைவதற்கு முழுமையாக அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.