பிரித்தானியாவில் முடக்க செயற்பாடுகளை தளர்த்துவது குறித்த தீர்மானம் ஒத்திவைப்பு.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரித்தானியாவில் முடக்க செயற்பாடுகளை தளர்த்துவது குறித்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரித்தானியாவில் முடக்க செயற்பாடுகளை இன்றைய தினம் தளர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15  ஆம் திகதி வரை முடக்க செயற்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்

பிரித்தானியாவில் கொரோனா வைரச் தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 120 உயிரிழப்புகள் உட்பட 880 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இணங்க,  குறித்த முடக்க செயற்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அருங்காட்சியகங்கள், காட்சியகங்கள் மற்றும் சினிமாக்கள் போன்ற உட்புற அமைப்புகளில் முகம் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.