பிரித்தானியாவின் எதிர்க் கட்சியான தொழிற்கட்சி, அதன் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பினை இடைநீக்கம் செய்துள்ளது

பிரித்தானியாவின் எதிர்க் கட்சியான தொழிற்கட்சி, அதன் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பினை இடைநீக்கம் செய்துள்ளது.

சட்டவிரோத துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு அவரது தலைமையின் கீழான கட்சி பொறுப்பு என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜெரமி கோர்பின் நீக்கப்பட்டுள்ளார்.யூத எதிர்ப்பு பற்றிய மிகவும் விமர்சன அறிக்கைக்கு பதிலளித்ததற்காக ஜெரமி கோர்பின், கட்சியின் தற்போதைய தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரால் (Sir Keir Starmer) இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிற்கட்சிக்குள்ளான யூத விரோதத்தின் அளவு எதிரிகளால் வியத்தகு முறையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக கோர்பின் தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த இடைநீக்கத்தில் அரசியல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை எதிர்த்து கடுமையாக வாதிடவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.