பிரிட்டிஷ் மாகாண அரசு கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்க்கு பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது

பிரிட்டிஷ் மாகாண அரசு கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வண்ணம் பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 516 பேர் குறைந்தளவு நாளாந்த கோரோனோ தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாண சுகாதார தலைமை அதிகாரி Bonnie Henry நவம்பர் 05ம் திகதிக்கு பின்னர் இவ்வாறான குறைந்தளவு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி உள்ளதாக கூறியுள்ளார்.அத்துடன் 7122 பேர் தற்சமயம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் 57 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.