பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண தேர்தல் NDP கட்சியினர் பெரும்பான்மையுடன் வெற்றி

நேற்றைய தினம் கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண  தேர்தலில் NDP கட்சியினர் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றனர் இதன் மூலம் இதுவரை சிறுபான்மை கட்சியாக இருந்த NDP ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கட்சியாக மாறியுள்ளது  

 COVID-19 தொற்றுநோய்களின் நடுவில் இந்த தேர்தலை நடத்த முடிவெடுத்த John Horgan இன் NDP அரசாங்கத்துக்கு மக்கள் இரண்டாவது முறையும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இந்த தேர்தல் மூலம் வழங்கியிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில்  , பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு NDP போதுமான இடங்களை வென்றது. அஞ்சல் மூலம் பதிவுசெய்யப்பட்ட வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை . NDP கட்சி  53 இடங்களையும்,Liberal  கட்சி   27 இடங்களையும்,  பசுமைவாதிகள்(Green Party )  மூன்று இடங்களையும் வென்றனர்