பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் மூவர் பலி

இன்று பிரான்சின் நைஸில் உள்ள தேவாலயத்திற்கு அருகே நடந்த கத்தித்குத்து தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் இறந்துள்ளனர்.
பிரான்ஸ் அதிகாரிகள் பிரான்சில் பயங்கரவாத வன்முறைகளுக்கு அதிகபட்ச உஷார் நிலையில் இருக்கும் இந்த வேளையில் இந்த தீவிரவாத சம்பவம் இடம்பெற்றிருப்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


இன்று வியாழக்கிழமை Notre Dame தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது காயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அவர் தனியாகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்றும் வேறு எவரையும் இந்த தாக்குதல் தொடர்பாக தேடவில்லை எனவும் பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தியவரின் பெயர் விபரங்களை வெளியிட தனக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.


தாக்குதலின் சரியான நோக்கம் தெளிவாக இல்லை, ஆனால் பிரெஞ்சு வார இதழான Charlie Hebdo வெளியிட்ட முஸ்லீம் நபி முஹம்மதுவின் கேலிச்சித்திரங்கள் தொடர்பாக அண்மையில் பிரான்சில் நடந்த இரண்டு தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்லாமிய தீவிரவாத செயல்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கையில் இருக்கும் இந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் சபை புதிய வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்த விவாதத்தை நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாழக்கிழமை ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தியது.