பிரபுதேவா இரண்டாவது திருமணம்? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!

Prabhu Deva getting married for the second time? - Tamil News -  IndiaGlitz.com

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகராகவும் நடன இயக்குனராகவும் அறியப்பட்ட பிரபுதேவா, ரமலத் என்ற டான்ஸரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வில்லு படத்தின் உருவாக்கத்தின் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டதால் ரமலத்துடனான உறவை முறித்துக் கொண்டார்.

பின்னர் நயன்தாராவுடனும் காதல் முறிவு ஏற்பட்டு அவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போது தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.