பிரபல ஹிட் பட நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த இமான் !

jeyam ravi

ஜெயம் ரவியின் படங்கள் வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டு வருவதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் ஒரு காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. இந்நிலையில் அவர் தற்போது நடித்துள்ள படம் பூமி. இப்படத்தை இயக்குநர் லட்சுமணன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் ஒரு பாட்டிற்கு அனிருத்தை பாட வைத்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாளை ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு பூமி படத்தில் அனிருத் பாடிய முதல் பாடல் ரிலீஸாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

இதனால் ஜெயம் ரவியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, இசையமைப்பாலர் டி. இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Team #Bhoomi wishes Happiest B’Day to our hero @actor_jayamravi

Jayam Ravi's Birthday Celebration | HappyBday.to