பிரபல நடிகர் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்த 4 பேர் அதிரடி கைது!

பிரபல நடிகர் வீட்டுக்குள் புகுந்து மிரட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் மோகன்பாபுவுக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜல்லப்பள்ளியில் பங்களா உள்ளது. இங்கு குடும்பத்துடன் அவர் வசித்து வருகிறார். இங்கு நேற்று மாலை ஒரு டொயட்டோ கார் வேகமாக வந்தது. பங்களாவின் கேட்டுக்கு அருகே வந்த காரில் இருந்து 4 பேர் இறங்கினர். உள்ளே மோகன்பாபு இருக்கிறாரா? என்று செக்யூரிட்டிகளிடம் கேட்டுள்ளனர். அவர்கள் நீங்கள் யார், என்ன விவரம் என்று கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் செக்யூரிட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை மிரட்டினர். இந்த தகவலை நடிகர் மோகன்பாபுவுக்கு அவர்கள் தெரிவித்தனர். இது தெரிந்ததும் அவர்கள் கேட்டில் இருந்து வேகமாக காரில் ஏறி தப்பி ஓடினர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவானது. இதையடுத்து அவரும் நடிகை லட்சுமி மஞ்சுவும் பஹடிஷரிபஃப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

வீடியோ காட்சிகளையும் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், மைலர்தேவ்பள்ளி, துர்கா நகரைச் சேர்ந்த ராகவேந்திரா, ஆனந்த், டேவிட், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் AP 31 AN 0004 என்ற இன்னோவா காரில் நடிகர் மோகன்பாபு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அந்த கார் விஜயலட்சுமி என்பவருக்குச் சொந்தமானது. எதற்காக அவர்கள் மோகன்பாபு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.