பிரபல நடிகருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி

Ala Vaikunthapurramuloo streaming on Netflix • Watch Link

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலக பிரமுகர்கள் உள்பட பல நடிகர் நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் ஒரு சிலர் பலியாகினர் என்பதும் தெரிந்ததே,
அந்த வகையில் தற்போது அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனது ரசிகர்கள் தன்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி