பிரபல கொரிய நடிகை 36 வயதில் மாரடைப்பால் மரணம்!

பிரபல கொரிய நடிகை Oh in-hye தனது 36 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

Yeonsu மாவட்டத்தில் வசிக்கும் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மூச்சுத்திணறல் மற்றும் இதயத்துடிப்பு குறைந்ததால், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் முதலுதவி சிகிச்சை அளித்தும் எந்தப் பலனும் இல்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர். அவர் சுயநினைவு இழந்து சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு வெளியான ‘Sin of the Family’ என்ற படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு 2013ம் ஆண்டு வெளியான ‘No Breathing’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

Oh in-hye மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அதனால் அந்த கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.