பிரதமர் மோடி முதல்வர்களுடன் இன்று ஆலோசனை

 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பரவல் அதிகம் உள்ள, தமிழகம் உட்பட, 10 மாநில முதல்வர்களுடன், இன்று (ஆக., 11) காலை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பிரன்ஸ்’ வாயிலாக, ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. எனினும், பல மாநிலங்களில், நோய் பரவல் தொடர்ந்தபடி உள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் மாநிலங்கள் உள்ளன.இ ந்த, 10 மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை, 10:30 மணிக்கு, ஆலோசனை நடத்த உள்ளார்.