“பிசாசு 2” படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த மிஷ்கின்!

மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள திரைப்படம் பிசாசு. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். அடுத்த மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

மிஷ்கின் படங்களில் எப்போதும் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதிலும் குறிப்பாக பின்னணி இசை மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும். அது இளையராஜாவாக இருந்தாலும் சரி, அரோல் கொரோலி மற்றும் கே போன்றவர்களாக இருந்தாலும் சரி… அவர்களிடம் இருந்து தனித்துவமான இசையை வாங்கிவிடுவார் மிஷ்கின்.

இந்நிலையில் அவரின் பிசாசு 2 படத்துக்கு அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இல்லாமல், அவரின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவை இசையமைத்து வருகிறார். படத்தின் இசை பணிகள் துவங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில், கார்த்திக் ராஜா உடன் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ” பிசாசு படத்தின் மியூசிக் கம்போசிஷன் துவங்கிவிட்டதாக கூறியுள்ளார். இந்த பாடல்களை கேட்க ரசிகர்கள் அதிக ஆர்வம் அடைந்துவிட்டனர்.