பிக்பாஸ் வீட்டுக்குள் சாதி பாகுபாடு காட்டுகிறாரா ரம்யா பாண்டியன் – கடுப்பான நெட்டிசன்ஸ்!

Folk singer Velmurugan hopes to revive 'oyilattam' - The Hindu

நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டுக்குள் சாதி பாகுபாடுகளைக் கடை பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.

இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார். அங்கு அவர் சாதிய பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் எல்லா போட்டியாளர்களுடனும் நன்றாக பழகும் அவர் பாடகர் வேல்முருகனுடன் மட்டும் அவ்வளவாக பழகுவதில்லை. அவரிடம் எதுவும் பேசுவதுமில்லை என நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.