பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகிறது. இதனையடுத்து 50 நாளில் உங்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்க ஒவ்வொருவரும் பதில் அளித்து வரும் காட்சிகள் வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறுவார் என்ற வகையில் பாலாஜி, சோமசுந்தரம், அனிதா, சம்யுக்தா ஆகியோர் இன்று காப்பாற்றப்பட்டு, சுசித்ரா இன்று வெளியேறுகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வந்த தகவலின் படி சுசித்ராவுக்கு தான் குறைவான வாக்குகள் இருந்ததாகவும் இதனால் அவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். பெரும் எதிர்பார்ப்புடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சுசித்ரா முதல் இரண்டு நாட்களை தவிர மற்ற நாட்களில் அவருடைய நடவடிக்கைகள் சரியில்லை என்ற விமர்சனம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

அதுமட்டுமன்றி போட்டியாளர்களுக்கு இடையிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தியதால், குறிப்பாக பாலாஜிக்கு நெருக்கமாக இருந்துகொண்டே அவருக்கு பிரச்சனை ஏற்படுத்தியதால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பதும், அதனால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.