பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீர் மரணம்

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் இவரது தந்தை கனடாவில் பணியாற்றி வந்தார். தந்தையை பிரிந்து வாழும் லாஸ்லியா மற்றும் அவரது தந்தை பாசம் பிக்பாஸின் அந்த சீசன் முழுவதும் பெரிதாக பேசப்பட்டது

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த லாஸ்லியா ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ட்விட்டரில் #Losliya மற்றும் #RIPMariyanesan ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் லாஸ்லியா தந்தையர் தினத்தன்று தனது தந்தையை எவ்வளவு பிடிக்கும், தன்னை எப்படி பார்த்துக் கொண்டார் என்பது குறித்து வெளியிட்டுள்ள உருமாக வீடியோ இணையத்தில் லாஸ்லியா ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.