பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை: பிரபல நடிகரின் மகள் விளக்கம்!

உங்க அப்பாவின் காதலியா நடிப்பியா? என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த  பிகில் இந்திரஜா.!! - tamil360newz

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இதுவரை இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும், இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் வரும் ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சிலர் வைல்ட்கார்டு போட்டியாளர்களாக வர வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக தொலைக்காட்சி நடிகர் ஒருவரும் பிகில் படத்தில் நடித்த இந்திராஜாவும் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக வர வாய்ப்பிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து இந்திரஜா விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்றும், நான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன் என்று நான் ஹோட்டலில் தங்கியிருந்த புகைப்படத்தை வைத்து நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்துள்ளார். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திரஜா கலந்து கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது