பிக்பாஸ் டைட்டிலை வென்று விட்டார் ஆரி – 11.6 கோடி வாக்குகள்

Bigg Boss Tamil 4 Grand Finale: Date, Time, Where To Watch And Special  Guest Details - Filmibeat

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் கார்ட் ஜெயித்துள்ளதாக சமீபத்திய தகவல் கூறுகின்றது. இந்த சீசனில் ஃபைனல் ரவுண்டிற்கு ஆரி , பாலாஜி , சோம் , ரியோ , ரம்யா பாண்டியன் உட்பட மொத்தம் 5 பேர் பங்கேற்றனர். அதில் இதுவரை ரம்மியா மற்றும் சோம் ஆகிய இருவரும் வெளியேறிவிட்டனர்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே ஆரியின் குணத்திற்கு தான் மக்கள் ஆதரவு இருந்து வந்தது. மேலும், ஆரி தான் டைட்டில் வின் பண்ணவேண்டும் என மக்கள் குரல் கொடுத்து லட்சக்கணக்கில் ஓட்டளித்தனர். நாம் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஆரி பிக்பாஸ் 4 சீசன் டைட்டிலை வென்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

ஆம், வெளிவந்துள்ள தகவலின்படி 11.6 கோடி வாக்குகள் பெற்று பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆரி டைட்டிலை வென்றுள்ளார். அதற்கு அடுத்ததாக 4 கோடி வாக்கு
இரண்டாம் இடமும், 89 லட்சம் வாக்கு மூன்றாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது. இதில் அநேகமாக பாலா தான் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பார் என கண்ணிக்கமுடிகிறது. இந்த இறுதி எபிசோட் முடிவடைய இன்னும் சில மணித்தியாளங்களே உள்ளது.