பிக்பாஸ் சீசன் 4 – முதல் நாளிலேயே ஷிவானியை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்..

பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமாகும். ஏற்கனவே மூன்று சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கியுள்ளது.

கடந்த மூன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில் ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி ,சோம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோரே பங்கேற்றுள்ளனர்.

நான்காவது சீசனுக்கான முதல் நாள் முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது. அதில் தூங்கி எழுந்தவுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்டியாளர்கள் வெறித்தனமாக நடனம் ஆடுகின்றனர். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஷிவானியை மற்ற போட்டியாளர்கள் கடுமையாக சாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதில், சனம் ஷெட்டி, ஷிவானிக்கு இதய முத்திரை ஒன்றை கொடுத்து, மற்றவர்களை விட்டு நீங்கள் விலகி இருப்பது போல தோன்றுகிறது என்றும் உங்கள் வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லை என கூறுகிறார்.

மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி ஷிவானியிடம், ஏன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு தனியாக அமர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு ஷிவானி எனக்கு மற்றவர்களுடன் சேர நேரம் தேவை என கூறுகிறார். மேலும் நாம் இப்போது பேச வேண்டும் ஆனால் எனக்கு உரிமை இல்லை என்றால் நான் பேசவில்லை என வெறுப்புடன் கூறுகிறார். இன்று முதல் நாளிலேயே மற்ற போட்டியாளர்கள் சிலர் ஷிவானியை குற்றம் சாட்டுவது தெரிகிறது.

இதை பார்த்த ஷிவானி ரசிகர்கள் முதல் நாளே அவரை டார்கெட் செய்வதாக சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். எனவே இன்று சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.