பிக்பாஸை தொகுத்து வழங்க உள்ள நடிகை இவரா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

10 Best Movies Of Samantha you must watch | NewsTrack English 1

நடிகை சமந்தா இந்த ஆண்டுக்கான தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேற்குலகில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பாலிவுட்டுக்கு பரவியதை அடுத்து இப்போது தென்னிந்தியாவில் நான்கு ஆண்டுகளை தொட்டுள்ளது. தமிழில் நான்கு ஆண்டுகளும் கமலே தொகுத்து வழங்க, தெலுங்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரபலம் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு பெண் பிரபலத்தை தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது வேறு யாருமில்லை நாகார்ஜுனாவின் மருமகளும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவருமான சமந்தாதானாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.