பிக்பாஸை அடுத்து சமந்தா தொகுத்து வழங்கும் இன்னொரு நிகழ்ச்சி!

Samantha replaced by this actor in next movie – East Coast Daily English

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜுனாவுக்கு பதிலாக இரண்டு நாட்கள் மட்டும் சமந்தா தொகுத்து வழங்கினார் என்பதும் அந்த இரண்டு நாட்களிலும் மிகப்பெரிய வரவேற்பை சமந்தா பெற்றார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சாம்ஜாம் என்ற பெயரில் புதிதாக ஆரம்பிக்க உள்ள நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பிரபல தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களை பேட்டி எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், விஜய்தேவரகொண்டா, தமன்னா, ராஷ்மிகா மந்தனா ஆகிய திரையுலக நட்சத்திரங்களையும் சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீராங்கனைகளும் அவர் பேட்டி எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13 முதல் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியின் ஆகா ஒரிஜினல் என்ற ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா தற்போது அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஓடிடி மற்றும் டிவிக்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வத்துடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.