பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் Calgary இல் கைது செய்யப்பட்டார்

2014 இல் நடைபெற்ற  பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளுக்காக பீல் பிராந்திய பொலீசாரினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்  Calgary  இல் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்

அக்டோபர் மாதம் 22 ம் திகதி நிதந்தர வதிவிட முகவரி அற்ற 33 வயதான  Ravinder Sidhu Calgary இல் வசிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த வழக்கினை விசாரித்து வரும் விசேட அதிகாரிகள் Calgary க்கு சென்று ontario  மாகாணத்துக்கு அழைத்து வந்து அவர் மேல் பாலிய வன்முறை குற்றசாட்டுகளை பதிவு செய்தனர்  

இந்த வழக்கு விசாரணையில் ஒரு திருப்பு முனையாக கடந்த August மாதத்தில் மரபணு சோதனையின் மூலம் Sidhu குற்றவாளியென அடையாளம் காணப்பட்டார் இவரை கைது செய்ய கனடா முழுவதும் தேடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது   

2014 ஆண்டு August மாதம் 13 திகதி   Chinguacousy Road கும் Queen Street பகுதியில் ஒரு plazza வில் தனதுஇரண்டு பிள்ளைகளுடன் காரில் இருந்த ஒரு பெண்மணி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்