பாலாவை மட்டும் ENTERTAIN பண்ணா போதுமா” – ஷிவானியை பற்றி பேசி சிரித்த மூன்று போட்டியாளர்கள்..!

பிக்பாஸில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இன்று வெற்றியாளர்களை அறிவித்தார் பிக்பாஸ். அதன் பிறகு அஜித், சம்யுக்தா, ரம்யா பண்டியன் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஆஜித் கூறும்பொழுது இந்த வாரம் மிக மோசமாக பங்கேற்ற இரண்டு பேர் என்று சுசித்ரா மற்றும் ஷிவானியின் பெயரை கூறுகிறார். சம்யுக்தா உடனே “ஷிவானி என்ன செய்தாள்”என்று கேட்க. அதற்கு ரம்யா ‘எதுவுமே செய்யவில்லை. பாலாவை மட்டுமே சந்தோஷப்படுகிறார். வீட்டில் என்ன செய்தார்” என்று மூவரும் பேசி சிரிக்கின்றனர்.